பத்திரிகையாளர்கள் 50 ரூபாய், 60 ரூபாய்க்கே பைத்தியமாக அலைபவர்கள் - கங்கனா ரனாவத்

50 ரூபாய், 60 ரூபாய்க்கே பைத்தியமாக அலைபவர்கள் என பத்திரிகையாளர்கள் குறித்து நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம் செய்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் 50 ரூபாய், 60 ரூபாய்க்கே பைத்தியமாக அலைபவர்கள் - கங்கனா ரனாவத்
Published on

மும்பை,

பத்திரிகைக்காரர்களிடம் நடிகை கங்கனா ரனாவத் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளதோடு 50 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கும் பைத்தியமாக அலைபவர்கள் என விமர்சித்ததால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜட்ஜ்மென்டல் ஹை கியா?  படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது, தனது மணிகர்ணிகா படத்தைப் பற்றி தவறான விமர்சனம் எழுதியதாக பத்திரிகையாளர் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கங்கனா ரனாவத் குறித்த செய்தியைப் புறக்கணிக்கப் போவதாக கூறி பொழுதுபோக்குப் பத்திரிக்கையாளர்கள் சங்கம் அவரைப் புறக்கணித்தது.

இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், பத்திரிகையாளர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர்களை விலைக்கு வாங்க லட்சங்கள் தேவையில்லை என்றும் 50 ரூபாய், 60 ரூபாய்க்கே பைத்தியமாக அலைபவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com