'எமர்ஜென்சி' படத்திற்கு ஆஸ்கார் விருது வேண்டாம்.. புறக்கணித்த கங்கனா ரனாவத்

'எமர்ஜென்சி' படத்தில் கங்கனா ரனாவத் இந்திரா காந்தியாக நடித்துள்ளார்.
'எமர்ஜென்சி' படத்திற்கு ஆஸ்கார் விருது வேண்டாம்.. புறக்கணித்த கங்கனா ரனாவத்
Published on

மும்பை,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கவுசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பின்னர் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் படத்தை ஓ.டி.டி பார்த்த ரசிகர் ஒருவர் எமர்ஜென்சி படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அதில், "அமெரிக்கா தனது உண்மையான முகத்தை காட்ட விரும்பவில்லை. வளர்ந்து வரும் நாடுகளை எப்படி மிரட்டி, ஒடுக்கி, வளைக்கிறார்கள் என்பதை எமர்ஜென்சி படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதனால், அவர்களின் ஆஸ்கார் விருது அவர்களிடமே இருக்கட்டும். எங்களுக்கு தேசிய விருது உள்ளது" என்று ஆஸ்கார் விருதை புறக்கணித்து கங்கனா பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com