ராமராக நடிக்க தகுதி இல்லை... ரன்பீர் கபூரை சாடிய கங்கனா ரணாவத்

ராமராக நடிக்க தகுதி இல்லை... ரன்பீர் கபூரை சாடிய கங்கனா ரணாவத்
Published on

இந்தி வாரிசு நடிகர் நடிகைகளை தொடர்ந்து சாடி வரும் கங்கனா ரணாவத் தற்போது பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூரை கடுமையாக விமர்சித்து உள்ளார். பிரபாஸ் ராமராக நடிக்க ராமாயணம் கதை படமாகி வரும் நிலையில் இன்னொரு ராமாயண படத்தையும் எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதை வேடத்தில் அலியாபட், ராவணனாக கே.ஜி.எப் படத்தில் நடித்து பிரபலமான யஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இதையடுத்து ரன்பீர் கபூர் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சித்து கங்கனா ரணாவத் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்தியில் அடுத்து தயாராக உள்ள ராமாயணம் படம் பற்றி கேள்விப்பட்டேன். ஒரு ஒல்லியான வெள்ளை எலி என்று அழைக்கப்படும் நடிகர் ராமராக நடிக்க இருப்பதாக கூறுகின்றனர்.

இவர் சினிமாவில் உள்ள ஒவ்வொருவரை பற்றியும் அவதூறு பரப்பி பிரபலமானவர். போதை பழக்கத்துக்கு அடிமையானவர். பெண்கள் பின்னால் சுற்றுபவர். இப்போது ராமராக வர ஆசைப்படுகிறார். தனது செயல் தோற்றம், முகதோற்றத்தில் ராமரைபோல் இருக்கும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ராவணன் பாத்திரத்தை கொடுத்துள்ளனர்.

போதைக்கு அடிமையானவர் ராமராக நடிக்க கூடாது. இவர் துரியோதனன் போன்றவர், சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளிகளில் இவரும் இன்னொரு சகுனி தயாரிப்பாளரும் இருக்கிறார்கள். ஜெய்ஸ்ரீராம்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com