அயோத்தி வழக்கை படமாக்கும் கங்கனா

நடிகை கங்கனா ரணாவத் அயோத்தி வழக்கை படம் எடுக்க உள்ளார்.
அயோத்தி வழக்கை படமாக்கும் கங்கனா
Published on

இந்தி பட உலகில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் கங்கனா ரணாவத். ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்குகிறார். குயின் இந்தி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். மணிகர்னிகா சரித்திர படத்தில் ஜான்சி ராணியாக நடித்து இருந்தார். தற்போது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் வழக்கை மையமாக வைத்து அபராஜிதா அயோத்தியா என்ற படத்தை தயாரித்து இயக்கப் போவதாக கங்கனா ரணாவத் அறிவித்து உள்ளார். அபராஜிதா அயோத்தியா படத்தின் கதையை இயக்குனர் ராஜமவுலியின் தந்தை கே.வி.விஜயேந்திரபிரசாத் எழுதி உள்ளார். இந்த படம் குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:

அபராஜிதா அயோத்தியா படத்தை தயாரிக்கிறேன். இந்த படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் இல்லை. வேறு இயக்குனரை தேர்வு செய்ய திட்டமிட்டேன். ஆனால் இது பெரிய பட்ஜெட் படம் என்பதால் எனது பங்குதாரர்கள் நான் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்றனர். அதனால் நானே படத்தை டைரக்டு செய்கிறேன். இந்த படம் சர்ச்சைக்குரிய கதையாக இருக்காது. ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் காதல் கதையம்சம்சத்தில் தெய்வம் சம்பந்தமான கதையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com