சீதையாக நடிக்கும் கங்கனா ரணாவத்

ராமாயணத்தை தழுவி ஏற்கனவே பல படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வந்துள்ளன. தற்போது மீண்டும் அதிக பொருட்செலவில் ராமாயணம் கதை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக உள்ளது.
சீதையாக நடிக்கும் கங்கனா ரணாவத்
Published on

இதில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேர்வு செய்யும் பணி நடந்தது. பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினர். சீதையாக நடிக்க கரீனா கபூர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. சீதை வேடத்துக்கு அதிக சம்பளம் கேட்டு மத நம்பிக்கையை கரீனா கொச்சைப்படுத்தி விட்டதாக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து அவருக்கு பதில் வேறு நடிகையை பரிசீலித்து வந்தனர். தற்போது சீதை வேடத்துக்கு கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளனர். இது குறித்து கங்கனா கூறும்போது, திறமையான கலைஞர்களை கொண்ட குழுவினருடன் இணைந்து சீதை, ராமரின் ஆசீர்வாதங்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெய் ஶ்ரீராம்'' என்று கூறியுள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்த தலைவி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com