வருமான வரி பாக்கி செலுத்தாத கங்கனா

வருமான வரி பாக்கி செலுத்தாத கங்கனா.
வருமான வரி பாக்கி செலுத்தாத கங்கனா
Published on

இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கனா ரணாவத் ஒரு படத்தில் நடிக்க ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு கங்கனா ரணாவத் வீட்டில் இருக்கிறார். வேலை இல்லாததால் வருமான வரி செலுத்த கஷ்டப்படுவதாக கங்கனா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் அதிக வருமான வரி செலுத்துகிறேன். என்னுடைய மொத்த வருமானத்தில் 45 சதவீதத்தை வருமான வரியாக செலுத்தி வருகிறேன். ஆனால் கடந்த வருடம் எனக்கு வேலை இல்லை. இதனால் வாழ்க்கையில் முதல் தடவையாக எனது வருமான வரியின் பாதி தொகையை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. நான் வரி செலுத்த தாமதம் செய்ததால் வட்டி விதித்துள்ளனர். ஆனாலும் இதனை வரவேற்கிறேன். இந்த காலம் வரி செலுத்தும் தனி நபர்களுக்கு கஷ்டமான காலமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com