'கங்குவா' பட சிறப்புக் காட்சி - படக்குழு தகவல்

'கங்குவா' படத்தின் சிறப்பு காட்சி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'Kanguva' movie special screening - information released by the film crew
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். இந்தப் படம் வரலாற்று கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளநிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'கங்குவா' பட ரிலீஸ் நாளில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டிலும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டு அரசுக்கு மனு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com