தமிழ் படத்தில் நடிக்கும் கன்னட நடிகர் சிவராஜ்குமார்

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார்.
தமிழ் படத்தில் நடிக்கும் கன்னட நடிகர் சிவராஜ்குமார்
Published on

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார். தமிழில் இவர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்தார். இப்போது ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெயிலர் 2’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என அறிவித்துள்ளனர்.. சிவராஜ்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான ‘45’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com