"டூரிஸ்ட் பேமிலி" படத்தை புகழ்ந்த கன்னட நடிகர்

சசிகுமார் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
"டூரிஸ்ட் பேமிலி" படத்தை புகழ்ந்த கன்னட நடிகர்
Published on

சென்னை,

அயோத்தி, கருடன், நந்தன்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை அடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமலி'. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது.சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் இயக்குநர் அபிஜன் ஜீவிந்த், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படம் 4வது வாரத்தில் வெற்றிநடைபோட்டு வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் இப்படம் இன்றுவரையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமலி' திரைப்படம் ஜப்பானில் நாளை வெளியாகிறது. இத்திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.86 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமவுலி, சூர்யா, நானி ஆகியோரை தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப்பும் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார்.

கன்னட நடிகர் கிச்சா சுதீப் 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்தை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "சமீப காலங்களில் மிகச் சிறந்த எழுத்து மற்றும் செயல்பாடு. 'டூரிஸ்ட் பேமிலி' நிச்சயமாக ஒரு மைல் கல் கதை சொல்லல். இது என்னை என் இருக்கையிலேயே கட்டிப்போட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதன் சொந்த தருணங்களும் இடமும் உண்டு, மேலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிகர்களால் குறைபாடின்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. அருமையான நடிகர்கள் தேர்வு. இசை மற்றொரு பெரிய சொத்து" என்று குறிப்பிட்டு, இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், ஆக்சன் திரில்லர் படமாக 'மேக்ஸ்' படத்தில் நடித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com