கன்னட நடிகை அபர்ணா காலமானார்

1984-ம் ஆண்டு கன்னட படத்தில் அறிமுகம் ஆன அபர்ணா, பல படங்களில் நடித்துள்ளார்.
கன்னட நடிகை அபர்ணா காலமானார்
Published on

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகை அபர்ணா (வயது 51). தூர்தர்ஷனின் கன்னட சேனலான சந்தனாவில் தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அபர்ணா, பெங்களூரு பனசங்கரி 2-வது ஸ்டேஜில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் வீட்டில் தவறி விழுந்த அபர்ணா, காயம் அடைந்து படுத்த படுக்கையானார். இதனால் அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அபர்ணா காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அபர்ணாவின் மறைவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1984-ம் ஆண்டு கன்னட படத்தில் அறிமுகம் ஆன அபர்ணா, பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சி தொடர்களிலும் அபர்ணா நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஒளிபரப்பான 'மஜா டாக்கீஸ்' தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் 'வரலட்சுமி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும் 2013-ம் ஆண்டு கன்னட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் அபர்ணா பங்கேற்றார். பெங்களூரு மெட்ரோ ரெயிலில் அறிவிக்கப்படும் பயணிகள் ஏறுதல், இறங்குதல், இடங்கள் குறித்த அறிவிப்புக்கு அபர்ணா தான் குரல் காடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com