தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகை ரீஷ்மா...ஹீரோ யார் தெரியுமா?


Kannada actress Reeshma to make her Tamil debut...Do you know who the hero is?
x

தற்போது, துருவா சர்ஜாவின் கேடி: தி டெவில் படத்தில் ரீஷ்மா நடித்திருக்கிறார்.

சென்னை,

''பேபி அண்ட் பேபி'' படத்தில் கடைசியாக நடித்த ஜெய், வினய் கிருஷ்ணா இயக்கும் வொர்க்கரில் கன்னட நடிகை ரீஷ்மாவுடன் கைகோர்த்திருக்கிறார்.

இப்படத்தில் யோகி பாபு, நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா மற்றும் வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் மூலம் நடிகை ரீஷ்மா தமிழில் அறிமுகமாக உள்ளார். இவர் ''ஏக் லவ் யா'', ''பானதரியல்லி'', ''யூஐ'' மற்றும் ''வாமனா'' ஆகிய கன்னட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, துருவா சர்ஜாவின் கேடி: தி டெவில் படத்திலும் நடித்திருக்கிறார்.

1 More update

Next Story