என் மனைவிக்கு போதைப்பொருள் வியாபாரியுடன் தகாத உறவு - பிரபல சினிமா தயாரிப்பாளர் புகார்

என் மனைவி போதைப்பொருள் பயன்படுத்துகிறார். போதைப்பொருள் வியாபாரியுடன் அவருக்கு தகாத உறவு உள்ளது என பிரபல சினிமா தயாரிப்பாளர் புகார் கூறி உள்ளார்.
என் மனைவிக்கு போதைப்பொருள் வியாபாரியுடன் தகாத உறவு - பிரபல சினிமா தயாரிப்பாளர் புகார்
Published on

பெங்களூரு

சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா மாநில சைபராபாத் போலீசார் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி வசம் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

கே.பி.சவுத்ரி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த 12 பிரபலங்களுடன் தொலைபேசியில் உரையாடியதற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை அசுரெட்டி, சினிமா நடிகை ஜோதி, பஞ்சாகுட்டா புஷ்பக் கேப்ஸ் உரிமையாளர் ரத்தன் ரெட்டி ஆகியோரிடம் கே.பி.சவுத்ரி பலமுறை போனில் பேசியதாக தெரிகிறது. பிரபல நடிகை சுரேகா வாணியின் மகள் சுப்ரீதா மற்றும் கே.பி.சவுத்ரியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கு விளக்கம் அளித்து சுரேகா வாணி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கன்னட திரையுலகிலும் போதைப்பொருள் சர்ச்சை எழுந்து உள்ளது.  கன்னட சினிமா தயாரிப்பாளர் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தனது மனைவி நமீதா போதைப்பொருளுக்கு அடிமையாகி தகாத உறவில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

போதைப்பொருள் சப்ளை செய்த லக்ஷ்மிஷ் பிரபு என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். அதுமட்டுமின்றி.. அவர்கள் மீது பெங்களூரு சென்னம்மனகெரே அச்சுகட்டு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது எத்தனை முறை போதைப்பொருளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியும் அவர் கேட்கவில்லை. அதுமட்டுமின்றி, அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த லக்ஷ்மிஷ் பிரபுவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒருமுறை வீட்டில் இரண்டு பேரை கையும் களவுமாக பிடித்தேன் என கூறி உள்ளார்.

சந்திரசேகரின் மனைவி நமீதாவும் கணவர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக புகார் அளித்துள்ளார். லக்ஷ்மிஷ் எனது நண்பன் மட்டுமே. என கணவரின் நண்பர்கள் அருண் மற்றும் ஹேமந்த் ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறி உள்ளார்.

இதுகுறித்து நமீதா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இரு தரப்பிலும் புகார்கள் வந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னடப் படங்களைத் தயாரித்துவரும் டி.சந்திரசேகர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நமீதாவை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் பெங்களூரில் உள்ள பனசங்கரி இரண்டாவது ஸ்டேஜில் வசிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com