ஆமதாபாத் விமான விபத்து...''கண்ணப்பா'' பட டிரெய்லர் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு


Kannappa trailer launch event that was scheduled to be held in Indore
x

இந்தூரில் இன்று 'கண்ணப்பா' பட டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற இருந்தது.

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. இதில், விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படம் வரும் 27ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளநிலையில், இந்தூரில் இன்று டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற இருந்தது.

இந்நிலையில், ஆமதாபாத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் விமான விபத்து காரணமாக, இந்தூரில் நடைபெறவிருந்த ''கண்ணப்பா'' டிரெய்லர் வெளியீட்டு விழாவை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஒரு நாள் தாமதமாக அதாவது நாளை படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் 241 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது உலகையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

1 More update

Next Story