ரத்தம் தெறிக்க, மிரட்டும் தோற்றத்தில் ரிஷப் ஷெட்டி.. கவனம் ஈர்க்கும் காந்தாரா-2 டீசர்

பான் இந்தியா படமாக உருவாகும் 'காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1' அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ரத்தம் தெறிக்க, மிரட்டும் தோற்றத்தில் ரிஷப் ஷெட்டி.. கவனம் ஈர்க்கும் காந்தாரா-2 டீசர்
Published on

சென்னை,

கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.

இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகிறது. இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், காந்தாராவின் அறிமுகமாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அதன்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு ரிஷப் ஷெட்டி படத்தின் கதையை எழுதி முடித்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 'காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1' என பெயரிடப்பட்டுள்ளது.

பான் இந்தியா படமாக உருவாகும் 'காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1' அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் டீசர், தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் என 7 மொழிகளில் வெளியாகியுள்ளது. டீசரை ஹோம்பலே பிலிம்ஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் ஷேர் செய்துள்ளது. 'ஒளி இருந்தா கண்ணுக்கு முன்னாடி இருக்கிறது எல்லாம் தெரியும். ஆனா ஒளியே இல்லனாலும் தரிசனம் இருக்கும். இன்னைக்கு நடந்ததுக்கும் முன்னாடி நடந்ததுக்கும் ஆதாரம் விளக்குதான். தெரியுதா?' எனவும் பதிவிட்டுள்ளது.

ரத்தத்தில் நனைந்தபடி வெறித்தனமாக ரிஷப் ஷெட்டி தோன்றும் இந்த டீசர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com