சுவிட்சர்லாந்தில் சுற்றும் 'காந்தாரா' நடிகை...புகைப்படங்கள் வைரல்


Kantara actress roaming around Switzerland...Viral photos
x

அவர் தனது இன்ஸ்டாகிராமில் அங்கு எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'காந்தாரா' திரைப்படத்தில் சப்தமி கவுடா கதாநாயகியாக நடித்தார். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் சமீபத்தில் வெளியாகி ரூ.655 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில், முதல் பாகத்தில் நடித்த சப்தமி கவுடா தற்போது சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.

அவர் தனது இன்ஸ்டாகிராமில் அங்கு எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சப்தமி கவுடா கடைசியாக நிதினுடன் தம்முடு படத்தில் நடித்திருந்தார்.

1 More update

Next Story