நடிகர் தனுஷுக்கு ஜோடியாகும் 'காந்தாரா' பட நடிகை

'லப்பர் பந்து' பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
நடிகர் தனுஷுக்கு ஜோடியாகும் 'காந்தாரா' பட நடிகை
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் (டி55) நடிக்கிறார்.

மேலும், 'லப்பர் பந்து' பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 'ஏஸ், மதராஸி, காந்தாரா' போன்ற படங்களில் நடித்த ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 'உறியடி' விஜயகுமார் வில்லனாக நடிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com