“காந்தாரா சாப்டர் 1” படத்தின் “வேங்குழலிலே இழைந்தாயடி” வீடியோ பாடல் வெளியீடு

ரிஷப் ஷெட்டி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் 2 வாரத்தில் ரூ. 717 கோடி வசூல் செய்துள்ளது.
Published on

கன்னட திரைப்படமான 'காந்தாரா' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

காந்தாரா சாப்டர் 1 படம் 2 வாரத்தில் ரூ. 717 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வரும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காந்தாரா சாப்டர் 1 படத்தின் திரைக்கதையும், பிரமாண்ட காட்சிகளும் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாட்டிலும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், காந்தாரா சாப்டர்1 படத்தின் வேங்குழலிலே இழைந்தாயடி வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடல் மதன் கார்க்கி வரிகளில் ஹரிசங்கர் மற்றும் சின்மயி இணைந்து பாடியுள்ளனர். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com