தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த ‘காந்தாரா சாப்டர் 1’ வில்லன்

குல்ஷன் தேவையா, இப்போது தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
சென்னை,
‘காந்தார சாப்டர் 1’ பிளாக்பஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த குல்ஷன் தேவையா, இப்போது தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
சமந்தா நடித்து தயாரிக்கும் மா இன்டி பங்காரத்தில் அவர் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.
குல்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் அறிவிப்புப் பதிவைப் பகிர்ந்து "நானும் இருக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும், அவரது கதாபாத்திரம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
சமந்தாவின் 'ஓ! பேபி' படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இந்தப் படத்தையும் இயக்குகிறார். 'மா இன்டி பங்காரம்' பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






