காந்தாரா சாப்டர் 1 படத்தின் பட்ஜெட் என்ன?... ரிஷப் மற்றும் ருக்மிணியின் சம்பளம் எவ்வளவு?

2-ம் பாகத்திற்கு ரூ. 125 கோடி வரை செலவிட்டதாகத் தெரிகிறது.
சென்னை,
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு, 'காந்தாரா' படத்தின் அடுத்த பாகம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகம் வெறும் ரூ.15-20 கோடியில் தயாரிக்கப்பட்டது, ஆனால் அது ரூ. 400 கோடி வரை வசூலித்தது. இப்போது, 2-ம் பாகத்திற்கு ரூ. 125 கோடி வரை செலவிட்டதாகத் தெரிகிறது.
இந்தப் படத்தின் சம்பளத்தைப் பொறுத்தவரை, முதல் பாகத்தில் நாயகனாகவும் இயக்குனராகவும் நடித்த ரிஷப் ஷெட்டி ரூ.4 கோடி மட்டுமே வாங்கியதாகக் கூறப்பட்டது. இந்த முறை, லாபத்தில் ஒரு பங்கை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ரிஷப் ஷெட்டியுடன், ருக்மிணி வசந்த், ஜெயராம், மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தனர். அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.2 கோடி கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக பேச்சு உள்ளது.
Related Tags :
Next Story






