மலையாளத்தில் அறிமுகமான 'காந்தாரா' பிரபலம்


Kantara fame Ajaneesh Loknath makes Malayalam debut with Kattalan
x

ஆக்சன் திரில்லரில் கன்னட இசையமைப்பாளரை சேர்த்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது.

சென்னை,

'மார்கோ' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை மலையாளத்தில் அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்திய தயாரிப்பாளர் ஷரீப் முஹமது தற்போது மீண்டும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

அதன்படி, பான்-இந்திய வெற்றிப் படமான 'காந்தாரா' படத்திற்கு இசையமைத்து பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், தற்போது ஷரீப் முஹமது தயாரிக்கும் இரண்டாவது படமான 'கட்டாலன்' மூலம் மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார்.

'மார்கோ'வின் வெற்றியைத் தொடர்ந்து, ஷரீப் முஹமது தயாரிக்கும் இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ் பெப்பே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த ஆக்சன் திரில்லரில் கன்னட இசையமைப்பாளரை சேர்த்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது.

1 More update

Next Story