'கர' படம்: தனுசுடன் நடிக்க மறுத்த நடிகை.. யார் தெரியுமா?

கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30ந் தேதி வெளியாக உள்ளது.
'கர' படம்: தனுசுடன் நடிக்க மறுத்த நடிகை.. யார் தெரியுமா?
Published on

சென்னை,

‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30ந் தேதி வெளியாக உள்ளது.

இதில் கருப்பான கிராமத்து பெண்ணாக மமிதா பைஜு நடித்தது விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு கருப்பான கதாநாயகிகளை தேர்வு செய்திருக்கலாமே...என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகள் அடித்து வந்தனர். இதற்கு படத்தின் இயக்குனர் விக்னேஷ்ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

தனுசுக்கு ஜோடியாக "3 பி.எச்.கே., மை லார்ட்" போன்ற படங்களில் நடித்த சைத்ரா ஆர்ச்சரை நடிக்க வைக்க விரும்பியதாகவும், ஆனால் அவரிடம் கதையை சொன்னபோது அவர் முடியாது என மறுத்துவிட்டார் என்றும் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார். மேலும், "மமிதா பைஜுவை அணுகும்போது, இப்படி ஒரு ரோலில் நடிக்க மமிதா ஒப்புக்கொள்ளமாட்டார் என முதலில் நினைத்தேன், ஆனால் அவர் ஓகே சொல்லி ஆச்சர்யம் கொடுத்தார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com