

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவியது. வயிறு பெரிதாக இருப்பது போன்ற புகைப்படமும் வலைத்தளத்தில் வைரலானது. ஆனால் கரீனா கபூர் தரப்பில் இதனை மறுத்தனர். அவர்கள் கூறும்போது, கரீனா கபூர் ஒரு படத்தில் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அக்ஷய்குமாரும் நடிக்கிறார். இந்த படத்தில் கர்ப்பமான பெண்போல் அவர் நடித்த புகைப்படம்தான் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது என்றனர்.