கரீனா கபூருடன் முதல் முறையாக இணைந்த பிருத்விராஜ்


Kareena Kapoor and Prithviraj Sukumaran to star in Meghna Gulzar’s ‘Daayra’
x

இப்படத்தை "சாம் பகதூர்" பட வெற்றியைத் தொடர்ந்து மேக்னா குல்சார் இயக்க உள்ளார்.

மும்பை:

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், 'எல் 2 எம்புரான்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இப்படத்தை "சாம் பகதூர்" பட வெற்றியைத் தொடர்ந்து மேக்னா குல்சார் இயக்க உள்ளார்.

ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு "தாய்ரா" எனப்பெயரிடப்பட்டது. 'ராசி' மற்றும் 'தல்வர்' போன்ற வெற்றிப்படங்களுக்கு பிறகு ஜங்கிலி பிக்சர்ஸுடன் மேக்னா குல்ஜார் மீண்டும் இணைந்துள்ளார்.

இதில் முதல் முறையாக பிருத்விராஜுடன் கரீனா கபூர் இணைந்து நடிக்கிறார். தற்போது பிரீ புரொடக்சனில் உள்ள "தாய்ரா" படத்தை யாஷ், சிமா மற்றும் மேக்னா குல்சார் இணைந்து எழுதியுள்ளனர்.

1 More update

Next Story