பிரபாஸ் படத்தில் இணையும் கரீனா கபூர்...ஆனால் அது ''ஸ்பிரிட்'' அல்ல


Kareena Kapoor to share screen space with Prabhas, but not in Spirit
x
தினத்தந்தி 2 July 2025 7:30 PM IST (Updated: 2 July 2025 7:30 PM IST)
t-max-icont-min-icon

பிரபாஸின் ஸ்பிரிட்டில் கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின.

சென்னை,

சில மாதங்களுக்கு முன்பு, பிரபாஸ் - சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட்டில் கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் அந்த செய்தி பொய்யானது.

இந்நிலையில், பிரபாஸின் மற்றொரு படத்தில் கரீனா நடிக்க உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதன்படி, 'தி ராஜாசாப்' படத்தில் ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாட கரீனா கபூரை ஒப்பந்தம் செய்ய படக்குழு முயற்சிப்பதாக தெரிகிறது.

நடிகை கரீனா கபூர் ஒரு சில சிறப்புப் பாடல்களில் நடனமாடி இருக்கிறார். அவை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இப்படத்தில் அவர் நடனமாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மாருதி இயக்கும் ''தி ராஜாசாப்'' படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி பதாகையின் கீழ் டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

1 More update

Next Story