பிருத்விராஜ்-கரீனா கபூர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வருகிறது.
பிருத்விராஜ்-கரீனா கபூர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

மும்பை:

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை "சாம் பகதூர்" பட வெற்றியைத் தொடர்ந்து மேக்னா குல்சார் இயக்குகிறார்.

ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு "தாய்ரா" எனப்பெயரிடப்பட்டுள்ளது. 'ராசி' மற்றும் 'தல்வர்' போன்ற வெற்றிப்படங்களுக்கு பிறகு ஜங்கிலி பிக்சர்ஸுடன் மேக்னா குல்ஜார் மீண்டும் இணைந்துள்ளார்.

இதில் கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "தாய்ரா" படத்தை யாஷ், சிமா மற்றும் மேக்னா குல்சார் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும், இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிருத்விராஜுடன் கரீனா கபூர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com