பிக்பாஸ் ஸ்டூடியோவை மூட அரசு உத்தரவு; பரபரப்பு சம்பவம்


பிக்பாஸ் ஸ்டூடியோவை மூட அரசு உத்தரவு; பரபரப்பு சம்பவம்
x
தினத்தந்தி 7 Oct 2025 3:45 PM IST (Updated: 7 Oct 2025 5:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ’பிக்பாஸ்’ எனப்படும் ’ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரு,

தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ’பிக்பாஸ்’ எனப்படும் ’ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், சமூகவலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்.

இதனிடையே, கர்நாடகாவிலும் பிக்பாஸ் நிகச்சி மிகவும் பிரபலமாகும். அம்மாநிலத்தில் நடிகர் கிச்சா சுதீப் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடானி பகுதியில் பிரமாண்ட ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் ஸ்டூடியோவை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீர், காற்று மாசு தொடர்பான உரிய அனுமதியை பெறாமல் ஸ்டூடியோ அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், ஸ்டூடியோவை உடனடியாக மூட மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story