கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் 'கார்த்தி 29'

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ளது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் 'கார்த்தி 29'
Published on

சென்னை,

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. காதல், கமர்ஷியல், ஆக்சன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன், விருமன், சர்தார்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, நடிகர் கார்த்தி, நலன் குமாராசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 'சார்தார் 2' படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'கார்த்தி 29' என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இதற்கிடையில் கார்த்தியின் 29-வது படத்தில் நடிக்க வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com