வித்தியாசமான தோற்றத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி

கார்த்தி நடித்து 2019-ல் தேவ், கைதி, தம்பி ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்தன. கைதி வசூல் சாதனை நிகழ்த்தியது.
வித்தியாசமான தோற்றத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி
Published on

கொரோனாவால் கடந்த வருடம் படங்கள் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் கார்த்தியின் சுல்தான் படம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது. கொரோனாவால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கார்த்தி அடுத்து புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். லட்சுமன்குமார் தயாரிக்க பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்துக்கு சர்தார் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு வேடத்தில் வயதானவராக வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். ஏற்கனவே சிறுத்தை படத்தில் இரு வேடங்களில் நடித்து இருந்தார். விஷால் நடித்த இரும்புத்திரை சிவகார்த்திகேயனின் ஹீரோ படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷி கன்னா நடிக்கிறார். சிம்ரன், சங்கி பாண்டே, ரஜிஷா விஜயன், முரளிசர்மா, முனிஷ் காந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். அதிரடி சண்டை படமாக தயாராகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com