'96' பட இயக்குனருடன் இணைந்த கார்த்தி..!

நடிகர் கார்த்தி '96' படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
'96' பட இயக்குனருடன் இணைந்த கார்த்தி..!
Published on

சென்னை,

நடிகர் கார்த்தி, தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் அறிமுக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், நடிகர் கார்த்தியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்ததாக கார்த்தி '96' படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இந்த படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com