சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி
Published on

சென்னை,

சுந்தர் சி ஒரு தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் 25 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர் குடும்ப படமான 'முறை மாமன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4 மற்றும் மதகஜராஜா' ஆகிய படங்கள் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களும் சுந்தர்.சியிடம் கதைகள் கதைகள் கேட்டு வருகிறார்கள். தற்போது இவர் 'கேங்கர்ஸ் மற்றும் மூக்குத்தி அம்மன் 2' ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையில், சுந்தர் சி மற்றும் கார்த்தி நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்பேது சுந்தர். சி, கார்த்தியிடம் கதை ஒன்றை செல்ல அந்த கதை கார்த்திக்கு மிகவும் பிடித்து பேய்விட்டதாம். எனவே விரைவில் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com