'நிறங்கள் மூன்று' படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு..!

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.
'நிறங்கள் மூன்று' படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு..!
Published on

சென்னை,

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ள இயக்குனர் கார்த்திக் நரேன், விரைவில் 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com