அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த கார்த்திக் சுப்புராஜ்


Karthik Subbaraj had darshan of Lord Shiva at Annamalaiyar Temple
x
தினத்தந்தி 18 March 2025 10:41 AM IST (Updated: 18 March 2025 12:31 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை ,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் 'ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் 'ரெட்ரோ' எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படமானது மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது மனைவி மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மனை அவர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

1 More update

Next Story