கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” படத்தின் ஸ்பாயிலர் டிரெய்லர் வெளியீடு

ரிஷிகாந்த், சனந்த் , கீர்த்தி சுரேஷ் நடித்த ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” படத்தின் ஸ்பாயிலர் டிரெய்லர்  வெளியீடு
Published on: 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தின் ஸ்பாயிலர் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

‘டோரதி’

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது

கார்த்திக் சுப்பராஜின் 10-வது திரைப்படம்

இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர் வாழ்க்கை

‘டோரதி’ திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பாயிலர் டிரெய்லர் வெளியீடு

இந்த நிலையில், திரைப்படம் வெளியான சுமார் 2 வாரங்களுக்குப் பிறகு ‘டோரதி’ திரைப்படத்தின் ஸ்பாயிலர் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பையும், சமூக ஊடகங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள ‘டோரதி’ படத்தில், ரிஷிகாந்த், சனந்தின் நடிப்பு கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com