கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் அடுத்த படம்...வெளியான அப்டேட்

வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்த மேயாத மான் இவர் தயாரித்த முதல் திரைப்படமாகும்.
Karthik Subbaraj's next film...update
Published on

சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் 'ரெட்ரோ' திரைப்படம் வெளியானது.

இயக்குனராக மட்டுமில்லாமல் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். இந்நிலையில், இவர் தயாரிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி, அந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்த மேயாத மான் இவர் தயாரித்த முதல் திரைப்படமாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com