கார்த்திக் சுப்பராஜின் "பெருசு" டிரெய்லர் வெளியானது

வைபவ் நடித்துள்ள ‘பெருசு’ படம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் 'ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் 'ரெட்ரோ' எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படமானது மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.

இயக்குனராக மட்டுமில்லாமல் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் 16-வது படமாக 'பெருசு' என்ற படம் தயாராகி உள்ளது. இதில் வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் வைபவ் தவிர சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் இறுதிச் சடங்கு சம்பந்தமான கதைக்களத்தில் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. இப்படம் வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் "பெருசு" படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com