இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29-வது படம்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'கார்த்தி 29' படத்தை டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்க உள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29-வது படம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. காதல், கமர்ஷியல், ஆக்சன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, நடிகர் கார்த்தி, நலன் குமாராசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 'சார்தார் 2' படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'கார்த்தி 29' என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இதற்கிடையில் கார்த்தியின் 29-வது படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இப்படம், கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளது.

இந்த நிலையில், கார்த்தி 29 படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆக்சன் கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மார்ச் மாதம் துவங்க உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com