கார்த்தியின் “மார்ஷல்” படப்பிடிப்பு அப்டேட்


கார்த்தியின்  “மார்ஷல்” படப்பிடிப்பு அப்டேட்
x
தினத்தந்தி 28 Sept 2025 9:33 PM IST (Updated: 28 Sept 2025 9:35 PM IST)
t-max-icont-min-icon

கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் கீழக்கரையில் துவங்கியுள்ளது.

டாணாக்கரன் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த தமிழ் இயக்கும் ‘மார்ஷல்' படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். கார்த்தி ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், சாய் அபயங்கர் இசையில் தயாராகும் இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாராகும் இந்த படம் 1960 காலக்கட்டத்தில் ராமேசுவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமேசுவரத்தில் நடைபெறுகிறது. இதற்காக 1960 காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறும்போது, “இந்த காட்சியை பார்க்கும் அனைவரும் 1960 காலகட்டத்துக்கு செல்வது உறுதி '' என்றார்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதற்கான, கார்த்தியின் தோற்றம் மற்றும் படப்பிடிப்பு வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. 1960 காலகட்டங்களில் நடந்த கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாகி வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

1 More update

Next Story