கார்த்தியின் சுல்தான் ரிலீஸ் தள்ளிவைப்பு?

கொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருப்பதால் காலை, பகல் காட்சிகளை ரத்து செய்து வருகிறார்கள்.
கார்த்தி
கார்த்தி
Published on

சில தியேட்டர்களை மூடியும் வைத்துள்ளனர். சூர்யாவின் சூரரை போற்று, விஜய் சேதுபதி நடித்த க.பெ. ரணசிங்கம், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பென்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வந்தன. ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் பொங்கலுக்கு ஓ.டி.டி.யில் வெளியாகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தை பொங்கலுக்கு தியேட்டரில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் மாஸ்டர், ஈஸ்வரன் படங்களுக்கு திரையரங்குகளை ஒதுக்கி விட்டதால் சுல்தான் படமும் ஓ.டி.டியில் வருகிறது என்று தகவல் பரவியது.

இதனை படக்குழுவினர் மறுத்தனர் சுல்தான் படம் ரிலீசை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com