'வா வாத்தியார்' படத்தின் டீசர் அப்டேட்

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'வா வாத்தியார்' படத்தின் டீசர் அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தின் 'மெய்யழகன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கார்த்தி. இவர் அடுத்ததாக 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்தியின் 26வது படமான இந்த படத்திற்கு வா வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரேட் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார்.சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், 'வா வாத்தியார்' படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'வா வாத்தியார்' படத்தின் டீசரை வரும் 14 ம் தேதி கங்குவா வெளியாகும் திரையரங்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com