காதலர் தினத்தில் திரைக்கு வரும் அனன்யா பாண்டேவின் புதிய படம்


Kartik Aaryan and Ananya Pandays Tu Meri Main Tera, Main Tera Tu Meri to release in February 2026, makers confirm with new poster
x

கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டே இணைந்து நடிக்கும் 'து மேரி மைன் தேரா, மைன் தேரா து மேரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

'பதி பத்னி அவுர் வோ' படத்திற்குப் பிறகு, கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டே மீண்டும் இணைந்து நடிக்கும் 'து மேரி மைன் தேரா, மைன் தேரா து மேரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகை அனன்யா பாண்டே. 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2', 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர், டிரீம் கேர்ள்-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக கேசரி சாப்டர் 2 படத்தில் நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, 'சத்யபிரேம் கி கதா'-வை இயக்கிய சமீர் வித்வான்ஸ் இயக்கத்தில் 'து மேரி மைன் தேரா, மைன் தேரா து மேரி' படத்தில் நடித்து வருகிறார்.

கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகிறது. இது ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

1 More update

Next Story