அனன்யா பாண்டேவின் புதிய படம் - தாஜ்மஹாலில் துவங்கிய படப்பிடிப்பு...வைரல் வீடியோ

இப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகிறது.
ஆக்ரா,
நடிகை அனன்யாவின் 'து மேரி மைன் தேரா மைன் தேரா து மேரி' படப்பிடிப்பு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் நடந்து வருகிறது. நடிகை அனன்யா பாண்டே, கார்த்திக் ஆர்யன் மற்றும் ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
'பதி பத்னி அவுர் வோ' படத்திற்குப் பிறகு, கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டே மீண்டும் இணைந்து நடிக்கும் படம் 'து மேரி மைன் தேரா மைன் தேரா து மேரி'.
இதனை 'சத்யபிரேம் கி கதா'-வை இயக்கிய சமீர் வித்வான்ஸ் இயக்குகிறார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகிறது.
Related Tags :
Next Story






