கருணாஸ் - நிமிஷா சஜயனின் “என்ன விலை” படத்திற்கு “தாதா​ சாகேப் பால்கே” விருது

கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்த ‘என்ன விலை’ படத்துக்கு 16வது தாதா சாகேப் பால்கே விருதுகளில் சிறந்த திரைக்கதைக்கான விருது கிடைத்துள்ளது.
கருணாஸ் - நிமிஷா சஜயனின் “என்ன விலை” படத்திற்கு “தாதா​ சாகேப் பால்கே” விருது
Published on

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்​பில் உரு​வாகி​யுள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ள இதில் ஒய்​.ஜி. மகேந்​திரா, பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமி​நாதன், கவி​தாலயா கிருஷ்ணன், தீபா சங்​கர், ராஜேந்​திரன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். சமூக-அரசி​யல் பின்​னணி​யுடன் கூடிய குடும்​ப திரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இப்​படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ் வி தயாரித்​துள்​ளார்.

இப்​படம் வெளிவரு​வதற்கு முன்பே தாதா​ சாகேப் பால்கே திரைப்பட விழா​வில் சிறந்த திரைக்​கதைக்​கான விருதை பெற்​றுள்​ளது. இயக்​குநர் சஜீவ் பழூர் கூறும்​போது, “ஆழ​மான யதார்த்​த​மான களத்​தில் இருந்து உரு​வான கதை இது. இந்​தப் படம் தீவிர​மான, ஆழமான அனுபவத்​தைப் பார்​வை​யாளர்​களுக்​குத் தரும்” என்​றார்.

‘என்ன விலை’ திரைப்படம் ராமேஸ்வரம், சென்னை, புதுச்சேரி, கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் பல கட்டங்களாக படமாக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெளியீட்டு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. படம் வெளியாவதற்கு முன்பே இதற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com