ஆர்ஜே பாலாஜி பிறந்தநாள்: வீடியோ வெளியிட்டு வாழ்த்திய “கருப்பு” படக்குழு

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி பிறந்தநாள்:  வீடியோ வெளியிட்டு  வாழ்த்திய  “கருப்பு” படக்குழு
Published on

சென்னை,

சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கடந்த மே மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், வெளியான முதல்நாளே வசூல் வேட்டையை தொடங்கியது.

படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

வசூலில் சாதனை படைத்த ‘கருப்பு’

கோடை விடுமுறை காலத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட ‘கருப்பு’, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இதன் மூலம், சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் ‘கருப்பு’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார்களை பரிசாக வழங்கினார் சூர்யா.

‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், ஆர்ஜே பாலாஜி பிறந்தநாளையொட்டி ‘கருப்பு’ படக்குழு அவரின் மாஸ் வீடியோவை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com