"கருப்பு ஒரு பிரமாண்டமான பொழுதுபோக்கு படம்" - நடிகை சுவாசிகா

ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய 'கருப்பு' படத்தில் சுவாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
"கருப்பு ஒரு பிரமாண்டமான பொழுதுபோக்கு படம்" - நடிகை சுவாசிகா
Published on

மதுரை,

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கருப்பு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

அதேவேளை, கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்தநிலையில், கருப்பு படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை சுவாசிகா, ரெட்ரோ படத்திற்குப் பிறகு சூர்யா சாருடன் நான் இணையும் இரண்டாவது படம் 'கருப்பு'. 'லப்பர் பந்து' படத்திற்குப் பிறகு என்னுடைய லுக்கை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்; அது இந்தப் படத்தின் மூலம் உடனடியாக அமைந்தது. என்னை அழைத்துப் பேசிய இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி சாருக்கு மிகப்பெரிய நன்றிகள். "கருப்பு' ஒரு பிரமாண்டமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. என்று பட விழாவில் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com