‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா விரைவில்- சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ படம் மே 14-ந்தேதி தேதி வெளியாகவுள்ளது.

‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா விரைவில்- சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்
Published on

சென்னை,

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கருப்பு’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் மே 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த படத்திலிருந்து "காட் மோட்", "நாங்க நாலு பேரு", "ராத்து ராசன்" என்ற பாடல்கள் அடுத்தடுத்து வெளியாக ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றன.

இந்த நிலையில், கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அப்பேட் கொடுத்துள்ளார். அதாவது, கருப்பு திரைப்படம் ஆக்ஷன் மற்றும் ஆன்மீகம் கலந்த படமகா உருவாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள பாடல்களை கேட்க மிகவும் நேர்த்தியாகவும் திரையரங்குகளில் ரசிகர்களை துள்ள வைக்கும் வகையில் மாஸாகவும் இருக்கும். படத்தின் பின்னணி இசை தற்போது 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது, விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com