அஜித் குறித்து கஸ்தூரி பரபரப்பு கருத்து

அஜித் குறித்து கஸ்தூரி பரபரப்பு கருத்து
Published on

தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. தற்போது தமிழ், தெலுங்கு மொழி படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கஸ்தூரி அவ்வப்போது சினிமா மற்றும் அரசியல் தொடர்பான கருத்துகளை கூறி பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்.

சமீபத்தில் கூட, அவர் நயன்தாராவை வம்புக்கு இழுத்து கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் பல்வேறு விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார்.

இந்தநிலையில் முன்னணி நடிகரான அஜித்குமார் பற்றி கஸ்தூரி சமூக வலைதளத்தில் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அதில், 'அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன், மருமகன் இப்படி எதுவுமில்லாமே, யாரும் தூக்கி விடாம, யாரையும் கெடுக்காமே, சொந்த முயற்சியில மேல வந்தவரு... அவரையெல்லாம் எப்பிடி தெரியும்?' என்று பதிவிட்டுள்ளார்.

அஜித்குமார் குறித்த இந்த பாராட்டு கருத்தால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் அஜித்குமார் நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com