சத்யராஜ்-க்கு அல்வா கொடுத்த கஸ்தூரி - ரஞ்சிதா மிஸ்சிங்

சத்யராஜ் உடன் அவர் நடித்த அமைதிப்படை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் இடம் பெற்ற அல்வா சீனை யாராலும் மறக்க முடியாது.
சத்யராஜ்-க்கு அல்வா கொடுத்த கஸ்தூரி -  ரஞ்சிதா மிஸ்சிங்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் புதுப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் விட பழைய படங்களின் ரீ ரிலீஸ்க்கு கிடைக்கும் வரவேற்பு மொத்த திரையுலகையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பல எவர் கிரீன் படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள். இது மற்ற மொழிகளிலும் இருந்தாலும் தமிழில் கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. அந்த வகையில் நடிகர் சத்யராஜ் நடித்து கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான படம் அமைதிப்படை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில்

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் கதை, வசனம் எழுதி இயக்கிய படம் அமைதிப்படை. இந்த படத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடிக்க, நடிகை கஸ்தூரி, ரஞ்சிதா, சுஜாதா, அல்வா வாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதேபோல் மணிவண்ணனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது வரும் மார்ச் 30ஆம் தேதி படத்தின் டிரைலரும், ஏப்ரல் 10ஆம் தேதி படத்தை ரீ ரிலீஸ் செய்யப்போவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக நடிகையாக பயணித்து வருபவர் கஸ்தூரி. குறிப்பாக 1990 காலகட்டங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர்.

குறிப்பாக சத்யராஜ் உடன் அவர் நடித்த அமைதிப்படை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் இடம் பெற்ற அல்வா சீனை யாராலும் மறக்க முடியாது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்த ஒதுங்கி அவர் சீரியல்களில் நடித்து வந்தார்.

அதற்குப் பிறகு தமிழ் படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியவர், தற்போது வரை அவ்வப்போது சில திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார். தற்போது சினிமா மற்றும் அரசியல் என இரு குதிரைகளின் பயணித்து வரும் அவர், சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இருப்பவர். மேலும், சினிமா சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

இந்தநிலையில், அந்த படத்தின் புரமோஷனை சத்யராஜ் மற்றும் கஸ்தூரி இருவரும் மாறி மாறி அல்வா ஊட்டி விட்டுக் கொண்டு ஆரம்பித்துள்ள அலப்பறைகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதனை தொடர்ந்து நடிகை கஸ்தூரி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ் தெரிந்த கதநாயகிகளுக்கு மணிவண்ணன் சார் கூட நடிக்கிறது எல்லாம் வரம் மாறி. எனக்கு பக்குத்தறிவு ஊட்டிய ஆசான்கள் மணிவண்ணன் சார், சத்யராஜ் சார்.

மணிவண்ணன் சார் பொறுத்தவரைக்கும் எனக்கு படிக்கும் பழக்கும் இருக்கிறது என்றதால கடைசியாக புதுமை பித்தன் கம்லிட் வொர்க்ஸ் குடுத்தாங்க அடுத்த வருடம் அவங்க இல்ல. என்னுடைய பிறந்தநாள் அன்னைக்கு இல்லாம போய்டாங்க. அதனால எனக்கு பிறந்தநாள் கிடையாது. நான் அவரை மிகவும் மிஸ் பண்றேன்.

இன்றைக்கு எல்லாம் அவர் இருந்து இருந்தா, கொண்டாடப்பட வேண்டிய பேன் இந்தியா டேரக்டர். இந்த படம், பெங்காலி, ஒடியா, தெலுங்குல , சிங்கள மொழில கூட எடுத்தாங்க எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்த படம் என்றால் அமைதிப்படை தான். இட் இஸ் ஒன் ஆப் தி லைப் டைம் கிப்ட். எவர் கிரீன் மூவி. தேங்யூ எவ்வரி படி. எனக்கு தெரிஞ்சவரைக்கும் அந்த படத்தில அனைவரும் கைலாசம் போய்டங்க..ஒருத்தவங்க கைலாசவிற்கே போய்டாங்க...மணிவண்ணன் சார் எத்தனை பேர திரைசினிமாவிற்கு குடுத்து இருக்கார்னு கணக்குபோட்டா நிறைய நிறைய பேர். அந்த ஆலமரத்த நாம் எல்லாரும் மிஸ் பண்றோம். இந்த படத்தை பிரமோட் பண்ணுங்க. இந்த படத்த பார்க்கிற அடுத்த ஜெனரேஷன் புடிச்ச தாயம்மா அப்படி சொல்லனும் நான் வேண்டிக்கிறேன் நன்றி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com