புது அவதாரம் எடுக்கும் "டைட்டானிக்" ரோஸ்


Kate Winslet to make directorial debut for Netflix
x
தினத்தந்தி 19 Feb 2025 3:37 PM IST (Updated: 19 Feb 2025 4:12 PM IST)
t-max-icont-min-icon

'டைட்டானிக்' படத்தில் ரோஸாக நடித்து உலக புகழ்பெற்ற நடிகை கேட் வின்ஸ்லெட்

சென்னை,

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து, இயக்கிய படம் 'டைட்டானிக்'. ஒரு கப்பலையும், காதலையும் மையமாகக் கொண்டு உலகின் மிகச் சிறந்த ஒரு காதல் காவியமாக இப்படம் எடுக்கப்பட்டது. 1997 ம் ஆண்டில் வெளியான இந்தப் படம், உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்ததோடு ரசிகர்கள் அனைவரின் மனதையும் வென்றது.

இதில், ரோஸாக நடித்து உலக புகழ்பெற்ற நடிகை கேட் வின்ஸ்லெட் . இவர் தற்போது புது அவதாரம் எடுத்திருக்கிறார். அதன்படி, இதுவரை படங்களில் நடிகையாக மட்டுமே வலம் வந்த இவர் தற்போது இயக்குனராகி இருக்கிறார்.

நெட்பிளிக்ஸுக்காக 'குட்பாய் ஜூன்'என்கிற படத்தை இயக்கி தயாரித்து அதில் நடிக்கவும் செய்துள்ளார். டோனி கோலெட், ஜானி ஃப்ளைன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கும் இந்தப்பட வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

1 More update

Next Story