

மும்பை,
இந்த புகைப்படம் வெளியானதும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கத்ரீனா கைப் - விக்கி கவுஷல்
பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுஷல், தங்களது மகன் வியான் கவுஷலின் முகத்தை முதன்முறையாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மகனின் முதல் பிறந்தநாளுக்கு அடுத்த நாளான தீபாவளி பண்டிகையன்று இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் விக்கி கவுஷல் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தங்களது மகனின் வருகையை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.தொடர்ந்து, கடந்த 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களது மகனுக்கு வியான் கவுஷல் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்தனர். இருப்பினும், குழந்தையின் முகத்தை இதுவரை பொதுவெளியில் காட்டாமல் பாதுகாத்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 7-ந் தேதி வியான் கவுஷலுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்கு அடுத்த நாளான தீபாவளி பண்டிகையன்று கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் தங்களது மகனின் முகத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளனர்.இதற்காக இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் குடும்ப புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில் கத்ரீனா மஞ்சள் நிற சல்வார் உடையிலும், விக்கி கவுஷல் பாரம்பரிய உடையிலும் காணப்படுகின்றனர். அவர்களது மகன் வியான் மஞ்சள் நிற ஆடை அணிந்து பெற்றோருடன் அழகாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படத்துடன், "இதுவரை இல்லாத அளவுக்கு எங்களுக்கு மிகவும் பிரகாசமான தீபாவளி. அனைவருக்கும் அன்பு, ஒளி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகைப்படம் வெளியானதும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகை அனன்யா பாண்டே, சோனம் கபூர், கியாரா அத்வானி உள்ளிட்டோர் அன்பை வெளிப்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். மகனின் முகத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.