

ராஜஸ்தான் ,
பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் - விக்கி கவுசால் திருமணம் இன்று கோலாகலமாக ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் நடைபெறுகிறது. இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் இந்த பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணம் நடக்கிறது.
இவர்களது ஆடம்பர திருமணத்திற்காக, கோடிக்கணக்கான செலவில், மலர்கள், வண்ண விளக்குகள் மற்றும் வரவேற்பு வளைவுகளால் சிக்ஸ் சென்ஸ் கோட்டை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
திருமணத்துக்காக மணமக்கள் தங்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை ரூ.7 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உறவினர்கள், நடிகர் நடிகைகள் தங்க அங்குள்ள ஆடம்பர ஓட்டல்களின் அறைகள் அனைத்தையும் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கத்ரீனாவும் விக்கியும் தங்கள் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ.80 கோடிக்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. அமேசான் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பு திருமணத்திலிருந்து எந்த வீடியோவும் கசிந்துவிடாது கூடாது என்பதற்காக கத்ரீனாவும் விக்கியும் தங்கள் விருந்தினர்களை அது சமந்தமான ஒப்பந்தகளில் கையெழுத்திட வைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.